திருமணத்திற்கு தயாரான லேடி சூப்பர் ஸ்டார் : விரைவில் நிச்சயதார்த்தம்..!!

share on:
Classic

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகின்றன. 

2015-ல் வெளியான நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக தகவல்கள் கசிந்தன. இதனை உறுதி செய்யும் வகையில் அவர்களும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதும், வெளியூர்களுக்கு பயணம் செய்வதும் என இருவரும் ஒன்றாக வலம்வந்தனர். எனினும் நயன்தாரவோ அல்லது விக்னேஷ் சிவனோ இந்த செய்திகளை உறுதிப்படுத்தவில்லை. 

இந்நிலையில் இவர்கள் இருவரையும் உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் இரு குடும்பத்தினரும் கூறியுள்ளதால், இன்னும் ஒரு சில மாதங்களில் அவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. அடுத்த ஆண்டு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர் எனவும் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள நயன்தாராவிற்கு இந்த ஆண்டு கொலையுதிர் காலம், மிஸ்டர் லோக்கல் பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மேலும் அடுத்த பொங்கலுக்கு வெளியாக உள்ள ரஜினி - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியின் தர்பார் படத்திலும் நயன் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

Ramya