இந்தியாவில் 60% உயர்ந்த 'லம்போர்கினி' விற்பனை...!

share on:
Classic

உலகின் முன்னணி ஸ்போர்ட் கார் நிறுவனமான 'லம்போர்கினி' யின் இந்திய வணிகம் 60 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியை தலைமையிடமாக கொண்ட 'லம்போர்கினி' நிறுவனத்தின் ஸ்போர்ட் கார்கள் உலகத்தரம் வாய்ந்தவை. இந்த நிறுவனத்தின் கார்களை சொந்தமாக்கிக்கொள்வது தான் பல பணக்காரர்களின் லட்சியமாகவே இருக்கிறது. கோடிகளில் விலைபோகும் இந்த கார்கள் ஒவ்வொன்றும் உயர்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகின்றன. மேலும், இதை உருவாக்க எடுத்துக்கொள்ளப்படும் நேரமும் மிக அதிகம். இதுபோன்று பார்த்து பார்த்து உருவாக்கப்படும் கார்களை நம் சாலைகளில் பார்ப்பதே மிகவும் அரிது.

 

அசுர வளர்ச்சி: 
சமீபத்தில் வெளியாகியிருக்கும் அறிக்கை ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் லம்போர்கினி கார்களின் விற்பனை 60 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அந்த நிறுவனமே அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்தியாவில் இத்தனை பணக்காரர்களா? என்று கேள்வி எழும் அளவிற்கு இந்த சதவீதம் இருக்கிறது. இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு வெறும் 26 கார்களே விற்பனையான நிலையில், இந்த வருடம் 45 கார்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் மொத்தம் 5,750 கார்கள் இந்த வருடம் விற்பனையாகி உள்ளது.
 

 

இந்தியர்கள் மேல் நம்பிக்கை இருக்கு !
இதுபற்றி பேசிய அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் சரத் அகர்வால் "இதுவரை ஸ்போர்ட் கார்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நாங்கள் கடந்த வருடம் 'Urus' என்ற சொகுசு காரை அறிமுகப்படுத்தினோம். இதன் மூலம் சொகுசு கார் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வந்த ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி, ஆஸ்டன் மார்ட்டின் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு முன்னேறியுள்ளோம். வரும் ஆண்டுகளில் இன்னும் வலிமையுடன் செயல்படுவோம். இது எல்லாம் இந்திய வணிகத்தின் மேல் நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைத் தான் காட்டுகிறது" என்று கூறினார். 
 

 

News Counter: 
100
Loading...

youtube