கடந்த 3 ஆண்டுகளின் பொறியியல் கட்-ஆப் மதிப்பெண் வெளியீடு..!

share on:
Classic

பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் வசதிக்காக கடந்த 3 ஆண்டுகளின் கட்-ஆப் மதிப்பெண்களை பொறியியல் மாணவர் சேர்க்கை கமிட்டி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் B.E, B.Tech, படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 2-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விண்ணப்ப பதிவு முடிந்தவுடன், சான்றிதழ் சரிபார்ப்பு, தரவரிசைப் பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு போன்றவை நடைபெறும். கலந்தாய்வின் போது, மாணவ, மாணவியரின் கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும்.

இதற்காக, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்தும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கமிட்டி கடந்த 3 ஆண்டுகளின் கட்-ஆப் மதிப்பெண் விவரங்களை வெளியிட்டுள்ளது. கட்-ஆப் மதிப்பெண் வரிசையில் கல்லூரிகளை அடையாளப்படுத்தி புதிய பட்டியலை பொறியியல் மாணவர் சேர்க்கைக் கமிட்டி www.tneaonline.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களின் கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு எந்தெந்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற தகவலை அறிந்து அதற்கேற்ற வகையில் கல்லூரியை தேர்வு செய்ய முடியும்.

News Counter: 
100
Loading...

Ragavan