டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை அவகாசம்..!

share on:
Classic

முதுநிலை பொறியியல் படிப்புக்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உள்ளிட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திவருகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் மே 8-ஆம் தேதி தொடங்கியது. கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ள நிலையில், மிகக்குறைவான பேரே விண்ணப்பித்து இருப்பதால் மே 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எம்.சி.ஏ. மற்றும் எம்.பி.ஏ. படிப்பில் சேர ஜூன் 22-ஆம் தேதியும் முதுநிலை பொறியியல் படிப்பில் சேர ஜூன் 23-ஆம் தேதியும் தேர்வு நடைபெற உள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan