இன்று விவசாயத்தின் பிதாமகனுக்கு இறுதிச்சடங்கு...

Classic

மறைந்த நெல் ஜெயராமனின் இறுதிச்சடங்கு, அவரது சொந்த ஊரில் இன்று நடைபெறுகிறது.

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு பாதுகாத்த இயற்கை ஆர்வலர் நெல் ஜெயராமன், புற்றுநோய் காரணமாக சென்னையில் நேற்று காலமானார். தேனாம்பேட்டையில் உள்ள அவரது நண்பர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நெல் ஜெயராமனின் உடலுக்கு அமைச்சர்கள் ஓ. எஸ்.மணியன், காமராஜ், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர். 

தொடர்ந்து, அவரது உடல், திருத்துறைப்பூண்டியில் கட்டிமேடு அருகே உள்ள சொந்த ஊரான ஆதிரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, ஜெயராமனின் உடலுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind