கடந்த ஆண்டு காணாமல் போன மாணவி எலும்புக் கூடாக மீட்பு

Classic

திருத்தணி அருகே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காணாமல் போன மாணவி, எலும்புக் கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த புது வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகள் சரிதா, அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடந்த செப்டம்பர் மாதம் காணால் போன நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. எங்கு தேடியும் அந்தப் பெண் கிடைக்காததால் போலீசார் தேடுவதை நிறுத்திவைத்திருந்தனர். இந்நிலையில், ஏரி ஓடை அருகே அந்தப் பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind