மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி தலைவர்கள் அஞ்சலி..!

share on:
Classic

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி, நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நெல்லையில் கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி ஊதிய உயர்வு கேட்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் தடியடி, துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் இருந்து தப்புவதற்காக தாமிரபரணி ஆற்றில் குதித்த 17 பேர்  ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் 20-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் பல்வேறு அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
 

News Counter: 
100
Loading...

Saravanan