ஆஃப்கனிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல் : 17 பேர் பலி

share on:
Classic

ஆஃப்கனிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். 

ஆஃப்கனிஸ்தானின் நங்கார்பூர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் விமான நிலையத்திற்கு அருகே உள்ள கட்டுமான நிறுவனத்தில் இந்த தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. 2 தீவிரவாதிகள் தங்கள் உடலில் பொருத்தப்பட்டிருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்தனர். 3 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த தாக்குதலில், சம்ப இடத்திலேயே 16 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுமார் 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

sajeev