தலைமுடி பிரச்சனைக்கு எலுமிச்சை சாறு சிறந்த தீர்வு..!!

share on:
Classic

தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண எலுமிச்சை சாறு ஒரு சிறந்த மருந்தாகும். எலுமிச்சை சாற்றினை நேரடியாக தலைக்கு பயன்படுத்தக்கூடாது.

எலுமிச்சையில் அசிட்டிக் பண்புகள்,ஸ்கால்ப்பில் எரிச்சலையும்,அரிப்பையும் உண்டாக்கும். அதனால் எலுமிச்சை சாற்றினை ஷாம்புவுடன் சேர்த்து பயன்படுத்தலாம். 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஷாம்புவுடன் கலந்து தலையில் தேய்த்து குளிர்ந்த நீரில் கலுவினால் தலைமுடி நன்கு பொலிவோடு இருக்கும்.

தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு :
தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, ஸ்கால்ப் ஊட்டம் பெறும். எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள்,பொடுகையும், தேங்காய் எண்ணெய் ஸ்கால்பிற்கு ஊட்டம் அளிக்கும்.

தயிருடன் எலுமிச்சை சாறு :
ஒரு பெளலில் சிறிது தயிரை எடுத்து அத்துடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து ஷாம்பு கொண்டு அலசினால் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, தலைமுடி நன்கு வளர்ச்சி பெறும்

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan