பட்டப்பகலில் ஊருக்குள் நடமாடிய சிறுத்தை..அச்சத்தில் மக்கள்..!

share on:
Classic

கர்நாடக மாநிலம் ஒன்னனூர் கிராமத்தில் சிறுத்தை ஒன்று பட்டப்பகலில் நடமாடியது அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழக கர்நாடக எல்லையான அருள்வாடி கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒன்னனூர் கிராமத்திற்குள் பட்டப்பகலில் சிறுத்தை ஒன்று புகுந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். 

தகவலறிந்து சென்ற கர்நாடகா மாநில வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் சிறுத்தையை பிடித்துச் சென்றனர். பிடிபட்ட சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது. பட்டப்பகலில் சிறுத்தை ஊருக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind