செல்பி எடுக்க முயன்ற பெண்ணின் மீது பாய்ந்த சிறுத்தை..!!

share on:
Classic

அமெரிக்காவில் வனவிலங்கு பூங்காவில் பாதுகாப்பு சுவரை தாண்டி செல்பி எடுக்க முயன்ற இளம்பெண் மீது சிறுத்தை பாய்ந்து கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள வனவிலங்கு சரணாலத்தில் 30-வயது பெண் ஒருவர் பாதுகாப்பு சுவரை தாண்டி கருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுத்தை அந்த பெண் மீது பாய்ந்து கடித்து குதறியது. அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர். இதுசம்மந்தமாக பூங்கா நிர்வாகம் வெளியிடப்படுள்ள அறிக்கையில் அந்த பெண் தற்போது  நலமுடன் உள்ளதாகவும், விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan