என்னது டிவி-ய மடிக்கலாமா..?

share on:
Classic

மடிக்கக் கூடிய அல்ட்ரா உயர் வகை கொண்ட தொலைக்காட்சி ஒன்றை LG நிறுவனம் அறிமுகம் செய்தது.

நுகர்வோர்களுக்கான எலெக்ட்ரானிக்ஸ் நிகழ்ச்சியில், தென் கொரிய நிறுவனமான எல்.ஜி. அதன் அல்ட்ரா உயர் வகை கொண்ட தொலைக்காட்சி ஒன்றை அறிமுகம் செய்தது. அதன் சிறப்பம்சமானது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றார்போல அதனை எந்த திசையிலும் திருப்பும் வகையில் அச்சுக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனை எளிதாக வளைத்து மற்றும் மடித்து வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியானது, தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் புதிய பயன்பாடுகளுக்கும் ஆதாரமாக உள்ளன. "இது அனைத்து வகை சுவர்களிலும் வரம்புகள் இல்லாமல் பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று டேவிட் வண்டேர்வால் LG மார்க்கெட்டிங் மூத்த துணை தலைவர் தொலைக்காட்சி அறிமுகம் நிகழ்ச்சியின் போது கூறினார். இதன்  65-அங்குலம் (165 சென்டிமீட்டர்) திரை முற்றிலும் அடித்தளத்திற்குள் மறைந்துவிடும்.

புகைப்படங்கள் காட்ட ஒரு பகுதியை மட்டும் நீட்டிக்க ஸ்மார்ட் சாதனங்களுக்கு ஒரு கட்டுப்பாட்டு திரை செயல்படும் அல்லது நம் பார்வைக்கு ஏற்றார்போல்  திரை முழுமையாக உயரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சியின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

News Counter: 
100
Loading...

aravind