கத்துவா சிறுமி பாலியல் கொலை வழக்கு : 3 பேருக்கு ஆயுள் தண்டனை

share on:
Classic

கத்துவா சிறுமி பாலியல் கொலை வழக்கில் பதான்கோட் குற்றவியல் நீதிமன்றம் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கை விசாரித்த பதன்கோட் குற்றவியல் நீதிமன்றம் கத்துவா கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் சஞ்சிராம், 2 சிறப்பு காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் குற்றவாளிகள் என அறிவித்தது. இதில், முக்கிய குற்றவாளிகளான சஞ்சி ராம் பர்வேஷ் குமார், தீபக் கஜுரிய ஆகிய 3 பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

மேலும், ஆதாரங்களை அழித்து குற்றத்தை மறைத்த தலைமை காவலர் திலக் ராஜ், காவல் உதவி ஆய்வாளர் ஆனந்த் தத்தா, சிறப்பு காவல் அதிகாரி ஆகிய 3 பேருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது. இந்த தீர்ப்பை ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான ஒமர் அப்துல்லா வரவேற்றுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan