வாழ்க்கைல ஜம்முனு இருக்க சில டிப்ஸ் !

share on:
Classic

உசுப்பேத்தறவன் கிட்ட உம்முன்னும் .. கடுப்பேத்தறவன் கிட்ட கம்முன்னும்  இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும். இத நான் சொல்லல மக்களே ! யாரோ சொன்னாங்கனு நடிகர் விஜய் சொன்னாரு. 

ஜம்முனு இருக்க சில டிப்ஸ்: 

1. முதல்ல ஓடாதீங்க.... வாழ்க்கையை நிதானமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். பணம் சம்பாதிக்க வேண்டும். வீடு வாங்கணும், கார் வாங்கனும். 25 வயசுக்குள்ள செட்டில் ஆகணும். அப்பப்பப்பா எவ்ளோ கமிட்மெண்ட்ஸ். இப்டியே போய்கிட்டு இருந்தா எப்பதான் வாழுறது. 

2. வேலை, வேலை என இயந்திரமாக சுற்றித் திரியாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு நேரம் ஒதுக்க கற்று கொள்ளுங்கள். முக மூடியுடன் வாழாதீர்கள். 

3. நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்களோ அப்படியே வாழுங்கள். மற்றவரின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து உங்களை நீங்கள் இழந்து விடாதீர்கள். 

4. உங்களுக்கு பிடித்ததை முழு மனதோடு தைரியமாக செய்ய பழகிக் கொள்ளுங்கள். 

5. முதலில் உங்களுக்கு நீங்கள் மதிப்பளிக்க கற்றுக்கொள்ளுங்கள்

6. மனதால் மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவிக்க பழகுங்கள். மழை, தென்றல், இயற்கை இவை சினிமாவுக்கு மட்டும் சொந்தம் ஏன்  கல்வெட்டுகளில் எழுதப்பட்டதா என்ன ? இல்லை மனதளவில் அவற்றை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். 

7. வேலைக்கு எப்போதும் 2 - ம்  இடம் அளிக்க கற்றுக்கொள்ளுங்கள். குடும்பம், மனைவி , குழந்தைககளுடன் பொழுதை அதிகம் கழியுங்கள். 

8. பிரச்சனைகளை  முடிந்த பிறகு புலம்பாமல், அதனை சமாளித்து வெற்றி கண்டு அதனை ருசித்து பாருங்கள். 

9. நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்களோ அதனை நோக்கி வேலை செய்யுங்கள்.

10 . மூளையை சுறுசுறுப்பாக  வையுங்கள். நேற்றைய நாளை எண்ணி இன்று வருந்தாதீர்கள். நாளாய நாளைப் பற்றிய வீண் கவலை இன்று வேண்டாம்.

News Counter: 
100
Loading...

sankaravadivu