வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை

share on:
Classic

கோவை வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி இல்லை என வனத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவையை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி வெள்ளியங்கிரி மலையில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால் வனப்பகுதியில் குரங்கனி விபத்து போன்று தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனால், அங்கு தீபம் ஏற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும், அரசியல் கட்சியினர் தங்களுக்கு வேண்டியவர்களை உரிய அனுமதியின்றி செல்ல அனுமதிப்பதால், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்ட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில் வெள்ளியங்கிரி வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், அங்குள்ள சுயம்பு ஆண்டவர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி இல்லை என்று கூறியது.

ஆனால் கோவில் வழிபாடு நடத்த மக்களை அனுமதிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை 24 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

News Counter: 
100
Loading...

sasikanth