தி லயன் கிங் படத்திற்காக சித்தார்த் டப்பிங் பேசும் வீடியோ வெளியீடு

share on:
Classic

தி லயன் கிங் படம் வரும் ஜூலை மாதம் 19ஆம் வெளியாகிறது

ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் தான்  Walt Disney Pictures. இவங்களோட தயாரிப்பில் 1994ஆம் ஆண்டு வெளிவந்து உலகம் முழுக்க நல்ல வரவேற்பை பெற்றுருந்த அனிமேஷன் படம் THE LION KING. ஹாலிவுட்டில்  இப்ப இதே பெயரில் fantasy படமா உருவாகிருக்கு. முதலில் கார்ட்டூன் வடிவில் வெளியான இந்தப் படம் இப்ப  டிஜிட்டலில் 3d முறையில் தயாராகி உள்ளது. THE LION KING படத்திற்கு இந்தியாவிலும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுருக்கு.  இந்த படத்தை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமா டிஸ்னி நிறுவனம் நடிகர்கள் அரவிந்த் சாமி,சித்தார்த்,ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்களை இந்த படத்தில் டப்பிங் பேச ஒப்பந்தம் செஞ்சுருந்தாங்க. மேலும் இவர்களை தவிர ரோகினி,ரோபோ ஷங்கர்,மனோபாலா,சிங்கம்புலி உள்ளிட்டோரும் இந்த LION KING  படத்திற்காக குரல் கொடுத்துருக்காங்க. சமீபத்தில் இந்த படத்திற்காக சித்தார்த் டப்பிங் பேசும் வீடீயோவை படக்குழு வெளியிட்டுருக்காங்க.  உலகம் முழுக்க பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  தி லயன் கிங்  படம்  வரும் ஜூலை மாதம் 19ஆம் வெளியாகருக்கு.

News Counter: 
100
Loading...

Padhmanaban