மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு விற்பனையான மதுபானம்..!

share on:
Classic

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக்கில் மதுபானங்கள் 422 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 16 முதல் 18 வரை மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுக்க உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் மதுப்பிரியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாட்களுக்கு தேவையான பாட்டில்களை வாங்கி வைத்துவிட்டனர். 

இதன்மூலம் ஏப்ரல் 12 முதல் 14 வரை வெறும் மூன்றே நாட்களில் தமிழகம் முழுவதும் 422 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றிருக்கிறது. சித்திரை திருவிழா நடக்கும் மதுரையில் அதிகபட்சமாக 139 கோடிக்கும் அடுத்து சென்னையில் 136 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

 

News Counter: 
100
Loading...

aravind