எளிமையான password..டேட்டா கசியும் அபாயம் !

share on:
Classic

'ப்லேஷ்டேட்டா' என்ற ஆன்லைன் நிறுவனம் எடுத்த ஆய்வில் இந்த வருடமும் 'பாஸ்வார்ட்' மற்றும் '123456' ஆகியவையே அதிகம் பயன்படுத்தப்பட்ட கடவுச்சொற்கள்  என்று கண்டறியப்பட்டுள்ளது .

 இன்டர்நெட்டில் இருந்து கசிந்த ஐந்து மில்லியன் பாஸ்வார்டுகளை கொண்டு,கடந்த ஏழு வருடங்களைப் போல இந்த வருடமும் இந்த ஆய்வு செய்யப்பட்டது ,அதில் பெரும்பாலானோர் ஹாக்கர்ஸ் மிக எளிமையாக யூகித்துவிடும் பாஸ்வார்டுகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மிக மோசமான 25 பாஸ்வார்டுகள் என்ற வரிசையில் 'football' 16 வது இடத்திலும், "princess" 11 வது இடத்திலும், "iloveyou" ஆகியவையும்  இடம்பெற்றுள்ளது .ஆன்லைனில் 10 சதவீத மக்கள் இதில் ஒன்றையாவது கட்டாயம் பயன்படுத்துகின்றனர் .இத்தகைய எளிமையான கடவுச்சொற்களால் டேட்டாக்களை பறிகொடுக்க நேரிடும் என்பதால் மக்கள் கடினமான கடவுச் சொற்களை பயன்படுத்த பழக வேண்டும் என்றும் அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது . 

News Counter: 
100
Loading...

youtube