திமுக கூட்டணியில் போட்டியிடும் 2 சிபிஎம் வேட்பாளர்கள் யாவர்..?

share on:
Classic

திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்சியூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இந்நிலையில், தற்போது திமுக கூட்டணியில் இரு தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்சியூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் முன்னாள் எம்பி பி.ஆர்.நடராஜனும், மதுரை தொகுதியில் பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.ஆர்.நடராஜன் யார்..?
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி.ஆர்.நடராஜன், 1968-ஆம் ஆண்டு முதல் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அங்கு மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர் நடராஜன் என்பதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சு.வெங்கடேசன் என்பவர் யார்..?
மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசன், பிரபல எழுத்தாளராவார்.  ஓட்டை இல்லாத புல்லாங்குழல், திசையெல்லாம் சூரியன் உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், கலாசாரத்தின் அரசியல், மனிதர்கள், நாடுகள், உலகங்கள், சமயம் கடந்த தமிழ் உள்ளிட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
காவல்கோட்டம் நாவலுக்காக சாகித்திய அகாதமி விருதும் பெற்றவர்.  புகழ்பெற்ற வேள்பாரியை படைத்ததால் வேள்பாரி எழுத்தாளர் என போற்றப்படும் அவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் உள்ளார். வாசகர்கள் மத்தியிலும், எழுத்தாளர்கள் மத்தியிலும் பிரபலமான சு.வெங்கடேசன், வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது...
 

News Counter: 
100
Loading...

Ragavan