உலகின் அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியல் : 141-வது இடத்தில் இந்தியா..!!

share on:
Classic

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொது நல அமைப்பு ஒன்று உலகின் அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒன்று உலக நாடுகளின் அமைதி குறித்து ஆய்வு நடத்தியது. இதில் சமூக பாதுகாப்பு, உள்நாட்டு பிரச்சனைகள், சர்வதேச பிரச்சனைகள் மற்றும் நாட்டின் இராணுவ செயல்பாடு ஆகியவற்றை கொண்டு 2019-ஆம் ஆண்டின் அமைதி மிகுந்த பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் கடந்த 11 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருக்கும் ஐஸ்லாந்து இந்த முறையும் உலகிலேயே அமைதி நிலவும் நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து, போர்ச்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்து இடங்களில் உள்ளன. 163 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இலங்கை 72-வது இடத்திலும், நேபாளம் 76 இடத்தையும் பெற்றுள்ளது.

இந்தியா 5 இடங்கள் பின்தங்கி தற்போது 141-வது இடத்தை பிடித்துள்ளது. வங்கதேசம் 101-வது இடத்தையும் பிடித்துள்ளது. பட்டியலில் 163-வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் உலகிலேயே அமைதி குறைவாக உள்ள நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது

 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan