அயோத்தி வழக்கு : மத்தியஸ்தர்கள் குழு முன்பு மனுதாரர்கள் ஆஜர்

share on:
Classic

அயோத்தி வழக்கு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்கள் குழு முன்பு மனுதாரர்கள் ஆஜராகினர்.

அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்ற வழக்கில், சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய தரப்பினர் சமமாக பகிர்ந்து கொள்ள அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் மத்தியஸ்தர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. 

இதனைத் தொடர்ந்து, பைசாபாத்தில் உள்ள அவாத் பல்கலைக்கழகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த வழக்கின் 25 மனுதார்களும் தங்களது வழக்கறிஞர்களுடன் ஆஜராகினர். இதற்காக அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

News Counter: 
100
Loading...

vinoth