சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள லிட்டன் தாஸ் விக்கெட்..!

share on:
Classic

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள லிட்டன் தாஸ் விக்கெட்..!

நடந்து வரும் உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிவருகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் தமீம் இக்பால் களமிறங்கினர். 

ஆட்டத்தின் 4-வது ஓவர் வீச முஜீப் உர் ரஹ்மான் அழைக்கப்பட்டார். அவர் வீசிய 4-வது ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட லிட்டன் தாஸ் கவர் டிரைவ் ஆட முயற்சித்த போது ஹஷ்மதுல்லா ஷாஹிடி-விடம் சென்றது.  இந்நிலையில் இது அவுட்டா? இல்லையா? என்பது தெரியாததால், மூன்றாவது அம்பயரின் முடிவுக்கு விடப்பட்டது. இதுதொடர்பாக முடிவெடுப்பதற்கு மூன்றாவது அம்பயர் நீண்டநேரம் எடுத்துக்கொண்டார். நீண்டநேரம் ஆராய்ச்சிக்கு பிறகு மூன்றாவது நடுவர் அவுட் என தெரிவித்தார். ஆனால் இது அவுட் இல்லை என்பது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வளைத்தலங்கள் முழுவதும் பகிரப்பட்டு வருகிறது..

 

News Counter: 
100
Loading...

Saravanan