ப்ரீமியர் லீக் : உல்வ்ஸ் அணியை வீழ்த்தியது லிவர்பூல்..!

share on:
Classic

இங்கிலாந்தில் நடைபெற்ற ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த லிபர்பூல் அணியுடன் Wolves அணி மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய லிவர்பூல் வீரர் சாடியோ மானே 17-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். 

பரபரப்பாக நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் லிவர்பூல் அணி 81 வது நிமிடத்தில் இரண்டாவது கோலை பதிவு செய்தது. ஆட்டநேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றிபெற்றது. இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடட் அணியுடன் கார்டிஃப் சிட்டி மோதியது. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் கார்டிஃப் அணி வெற்றிபெற்று மான்செஸ்டர் யுனட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

News Counter: 
100
Loading...

aravind