ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது லிவர்பூல் அணி..!

share on:
Classic

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் பலம் வாய்ந்த பார்சிலோனாவை வீழ்த்தி லிவர்பூல் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

யு.யி.எப்.ஏ ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்தின் அரையிறுதி போட்டி இங்கிலாந்தின் ஏன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பலம்வாய்ந்த நட்சத்திர வீரர்களைக் கொண்ட பார்சிலோனா அணியுடன் லிவர்பூர் அணி மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரமாக போராடினர். சிறப்பாக விளையாடிய லிவர்பூல் அணி வீரர் டிவோக் ஒரிகி 7 வது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினார்

பார்சிலோனாவின் கோல் முயற்சிகளை தடுத்து நிறுத்தி லிவர்பூல் அணி கூடுதல் நெருக்கடி அளித்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் லிவர்பூல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. அனல்பறந்த இரண்டாவது பாதி ஆட்டத்தில் லிவர்பூன் அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. லிவர்பூல் அணி வீரர் ஜியார்ஜினியோ 54 மற்றும் 56 ஆகிய நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து 79 வது நிமிடத்தில் லிவர்பூல் அணி 4வது கோலை பதிவு செய்தது. ஆட்டநேர முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. பலம் வாய்ந்த பார்சிலோனா அணியை லிவர்பூல் வீழ்த்தியதால் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravind