21-ஆம் தேதி முதல் அரசு மாதிரி பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள்...

share on:
Classic

சென்னை எழும்பூரில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் வரும் 21-ஆம் தேதி எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை முதலமைச்சர் பழனிச்சாமி தொடக்கி வைக்கிறார்.

ஆரம்பப்பள்ளி அளவிலேயே தரமான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், 3 கிலோ மீட்டர் அல்லது 4 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அங்கன்வாடிகளை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைத்து, அங்கு எல்.கே.ஜி, யு.கே.ஜி  வகுப்புகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்  முதல் கட்டமாக 2381 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன், அருகருகே உள்ள அங்கன்வாடிகளை இணைக்கும் நடவடிக்கையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும், சமூக நலத்துறை அதிகாரிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு இணைக்கப்பட்ட பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி  வகுப்புகளுக்கு கூடுதலாக ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

News Counter: 
100
Loading...

aravind