பழைய கடன் பிரச்னை தீரும்.. எந்த ராசிக்கு தெரிஞ்சிக்கனுமா..?

share on:
Classic

பழைய கடன் பிரச்னை தீரும்.. எந்த ராசிக்கு தெரிஞ்சிக்கனுமா..?

மேஷம் : குடும்பத்தில் குழப்பம் நிலவும். பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் முடியாமல், மனைவியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும் முடியாமல் தடுமாறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் சோர்வு உண்டாகும்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுபார்க்க வேண்டிவரும். அக்கம்- பக்கம்  இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்தவிஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.  

மிதுனம்: முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பு வாழ்க்கைத் துணையுடன் ஆலோசனை செய்வது நல்லது. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலுத்துக்கொள் ளாமல் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். 

கடகம் : வெற்றிகள் வந்தாலும், கூடவே ஒரு தொல்லையை அழைத்து வரும். எனவே, நிதானம் தேவை. உடல்நிலையில் அக்கறை தேவை. எதற்கும் உடல்நிலை குறித்த ஒரு முழு சோதனை செய்து கொள்வது நன்று. நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்களை எதிர்த்துப் பேசியவர்கள் பணிந்து வருவார்கள்.

சிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆடம்பரச்  செலவுகளைக் குறைத்துசேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

கன்னி: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலநேரங்களில் மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக் கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். 

துலாம் : எலக்ட்ரிக்கல் துறையில் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. ரயிலில் வெளியூர் செல்ல நேரிடலாம். அது திடீர் பயணமாக அமையும். திருமண தேதி முடிவாக வாய்ப்புள்ளது. இன்பமான நாள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்ப தால் உற்சாகமாக இருப்பீர்கள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் அதிகரிக்கும். அழகு,இளமைக் கூடும். கடனாககொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்.  விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். 

தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப்பழகுங்கள். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். 

மகரம் : நான் தான் ராஜா என்று நீங்கள் நினைக்கும் வரை உங்கள் பக்கம் வெற்றி வரவே வராது. அவமானங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் வேண்டும். உங்கள் முயற்சிகள் வெற்றிப் பெற இன்றைய நாள் உதவாது என்பதே உண்மை.

கும்பம்: எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத் தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். 

மீனம்: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள்நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள்உதவுவார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

News Counter: 
100
Loading...

sasikanth