அக்டோபர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல்..?

share on:
Classic

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த உத்தரவிட கோரி  கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கு முன்னதாக  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தொகுதி மறுவரை செய்யும் பணி நடந்ததால் தான் தேர்தலை நடத்த முடியவில்லை எனவும், தேர்தலை நடத்த கால அவகசாம் வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.  

இந்தநிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கை முடித்து வைத்தது.

 

News Counter: 
100
Loading...

aravind