மதசார்பற்ற கட்சிகள் இணைந்து போட்டியிட்டதற்கு கிடைத்த வெற்றி - சீதாராம் யெச்சூரி

share on:
Classic

தமிழகத்தில் மக்களவை தேர்தலின் வெற்றி என்பது மதசார்பற்ற கட்சிகள் இணைந்து போட்டியிட்டதற்கு கிடைத்த வெற்றி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்றார். இதில் மக்களவைத் தேர்தலில் கட்சி தொண்டர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்தும், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “தமிழகத்தில் மக்களவை தேர்தலின் வெற்றி என்பது மதசார்பற்ற கட்சிகள் இணைந்து போட்டியிட்டதற்கு கிடைத்த வெற்றி எனவும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” எனவும் கூறினார். அதேபோல், “மக்களவைத் தேர்தலில் பாஜக ரூ. 27,000 கோடி அளவிற்கு செலவிட்டுள்ளது எனவும் கட்சி வாரியான வாக்குசதவீதத்தை தேர்தல் ஆணையம் தற்போதுவரை ஏன் வெளியிடவில்லை..?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan