டெல்லியில் எதிர்கட்சிகள் ஆலோசனை.., காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சித் தலைவர்கள் பங்கேற்பு..!

share on:
Classic

தேர்தல் முடிவகளுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் குறித்து 21 எதிர்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில்ம் டெல்லியில் கூடிய எதிர்கட்சித் தலைவர்கள், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்து ஆலோசனை நடத்தினர். இதில், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி உள்ளிட்ட 21 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் பதிவானவற்றில் 50 சதவீத வாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் எண்ணி சரி பார்க்க வேண்டும் என்றும், அது ஒத்துப் போகவில்லை என்றால் தொகுதி முழுவதும் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி 21 கட்சித் தலைவர்களும் இன்று தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க உள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan