மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணி..!

share on:
Classic

மேற்குவங்கதில், முன்னதாகவே பிரசாரம் முடிவடையவுள்ளநிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரம்மாண்ட பேரணி நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேற்குவங்க மாநிலத்தில் மீதமுள்ள 9 மக்களவைத் தொகுதிகளில் வரும் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்குவங்கத்தில் அமித்ஷா மேற்கொண்ட பிரசாரத்தின்போது கலவரம் வெடித்தது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால், அம்மாநிலத்தில், ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடித்துக்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, தாகூர்புகூர் முதல், தரதாலா வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரமாண்டப் பேரணி நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan