சுனில் அரோராவுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல் கடிதம்..!

share on:
Classic

மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவு அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேற்கு வங்கத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது என்றும், வாக்குப்பதிவில் பாஜகவினர் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கூடுதல் பாதுகாப்புடன், வாக்குப்பதிவு அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan