மக்களவை தேர்தலில் மாநில வாரியாக கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன..?

share on:
Classic

7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் கட்சிகள் மாநில வாரியாக வெற்றி பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போது காணலாம்…

 • தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 20 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 8 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.
 • கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தியை காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. மற்ற கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 இடங்களிலும், கேரளா காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
 • கர்நாடகத்தில் 28 தொகுதிகளுக்கு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கட்சி 25 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 3 தொகுதிகளை காங்கிரஸ், ஜனதா தளம், சுயேட்சை கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
 • ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும், தெலுங்கு தேசம் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
 • இதேபோன்று, தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களையும் மட்டுமே கைப்பற்றியுள்ளன.
 • ராஜஸ்தானில் அதிகபட்சமாக பாஜக 24 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது நிலையில், ராஷ்டீரிய லோக் தளம் ஒரு இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
 • பஞ்சாப்பில் காங்கிரஸ் 8 இடங்களையும், பாஜக 2 இடங்களையும், சிரோமணி 2 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன.
 • மகாராஷ்ட்டிராவில் அதிகபட்சமாக 23 இடங்களை பாஜக வென்றுள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 18 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
 • மத்தியப்பிரதேசத்தில் அதிரடியாக பாஜக 28 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைத்துள்ளன.
 • ஜார்க்கண்ட்டில் பாஜக 11 இடங்களையும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் விடுதலை முன்னணி, மற்ற கட்சிகள் தலா ஒரு இடங்களையும் வென்றுள்ளன.
 • அசாமில் பாஜக 9 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களையும் மற்ற கட்சிகள் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
 • ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக 8 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
 • மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சி 22 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் மட்டுமே வெல்ல முடிந்தது.
 • அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் பாரதி ஜனதா கட்சி 62 தொகுதிகளை கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் 10 இடங்களிலும், சமாஜ்வாதி 5 இடங்களிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
 • சத்தீஸ்கரில் 9 இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
 • பீகார் மாநிலத்தில் 17 தொகுதிகளில் பாஜகவும், 6 இடங்களில் லோக் ஜனதா தளமும் வெற்றி பெற்றுள்ளது.
 • மிசோரத்தில் ஒரு மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் மிசோ முன்னணி வெற்றி பெற்றுள்ளன.
 • மேகாலயாவில் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி தலா ஒரு இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
 • மணிப்பூரில் பாஜக மற்றும் நாகா மக்கள் முன்னணி தலா ஒரு இடங்களையும் பெற்றுள்ளது.
 • நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
 • கோவாவில் காங்கிரஸ், பாஜக தலா ஒரு இடங்களிலும், ஜம்மு - காஷ்மீரில் பாஜக மற்றும் ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி தலா 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
 • இதுமட்டுமின்றி, இமாச்சல பிரதேசத்தில் 4 இடங்களிலும், ஹரியானாவில் 10 இடங்களிலும், குஜராத்தில் 26 இடங்களிலும், டெல்லியில் - 7 இடங்களிலும், டாமன் டையூ, சண்டிகரில் தலா ஒரு தொகுதிகளிலும், அருணாச்சலப்பிரதேசத்தில் 2 தொகுதிகளிலும் உத்தரகாண்டில் 5 தொகுதிகளிலும் திரிபுராவில் 2 தொகுதிகளிலும் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி வாகை சூடியுள்ளது
 • இதேபோன்று, காங்கிரஸ் புதுச்சேரியில், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகளில் தலா ஒரு தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
News Counter: 
100
Loading...

Ragavan