தமிழகத்தில் மொத்தம் 70.9 சதவீதம் வாக்குப்பதிவு..!

share on:
Classic

தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலில் இரவு 9 மணி நிலவரப்படி 70.9 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதேபோன்று, தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. இந்நிலையில், இரவு 9 மணி நிலவரப்படி தமழிகம் முழுவதும் 70.9 சதவீத வாக்குகள் பதிவானதாக சத்யபிரத சாகு தெரிவித்தார். அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 79.75 விழுக்காடு வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 57.43 விழுக்காடு வாக்குகளும் பதிவானதாக தெரிவித்தார்.

மேலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 71.62 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் கூறினார். அதிகபட்சமாக அரூர் தொகுதியில் 86.96 விழுக்காடு வாக்குகளும், குறைந்தபட்சமாக சாத்தூரில் 60.87 விழுக்காடு வாக்குகளும் பதிவானதாக கூறினார். மதுரையில் 62.01 விழுக்காடு வாக்குகள் பதிவானது.

News Counter: 
100
Loading...

Ragavan