மக்களவைத் தேர்தலில் சராசரியாக 67.11 சதவீத வாக்குகள் பதிவு..!

share on:
Classic

மக்களவைத் தேர்தலில் சராசரியாக 67.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக லட்சதீவில் 85 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக ஜம்மு - காஷ்மீரில் 29.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சராசரியாக 67.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், இந்த முறைதான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான 66.4 சதவீத வாக்குகளை விட இது 0.71 சதவீத வாக்குகள் அதிகமாகும். முழுமையான கணக்கீட்டிற்கு பின்னர் வாக்கு எண்ணிக்கை சதவீதம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan