மக்களவைத் தேர்தல் 2019 : இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..!!

share on:
Classic

மக்களவை தேர்தலுக்கான 7வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 6 கட்டத் தேர்தல் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில், 7 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் 7-வது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தல் சற்று முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 13 தொகுதியிலும், மேற்குவங்கத்தில் 9 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

பீகார், மத்திய பிரதேச மாநிலங்களில் தலா 8 தொகுதிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகள், சத்தீஸ்கரில் ஒரு தொகுதி என மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, நடிகர் சன்னி தியோல், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். 

மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்றுடன் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

News Counter: 
100
Loading...

Ramya