மக்களவை தேர்தல் 2019 : மீண்டும் வாரணாசியில் மோடி போட்டி..?

share on:
Classic

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜகவின் நாடாளுமன்ற குழு ஆலோசனை கூட்டம் நேற்று 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தேர்தல் குறித்த பல்வேறு விவகாரங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலை போல் இந்த தேர்தலிலும் பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த முறை அதே தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி தொகுதியில் போட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை 3லட்சம் வித்தியாசத்தில் தோற்கடித்தார் மோடி. அங்கு காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் வெறும் 75,000 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். எனவே இந்தத் தேர்தலிலும் மோடி வாரணாசி தொகுதியிலேயே போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

75 வயதுக்கு மேற்பட்ட பாஜக தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. வெற்றி பெறும் தகுதியுடைய எந்த வேட்பாளருக்கும் சீட் வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த தேர்தலில் 16 கூட்டணிகளில் போட்டியிட்ட பாஜக இந்த தேர்தலில் அதனை 29-ஆக உயர்த்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

 

News Counter: 
100
Loading...

Ramya