மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு : நாளையுடன் பிரச்சாரம் ஓய்வு..

share on:
Classic

மக்களவைத் தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் நாளையுடன் பிரசாரம் ஓய்வடைகிறது. 

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 6 கட்ட வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில், ஏழாம் கட்ட வாக்குப்பதிவானது மே 19 நடைபெற உள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என்று கருதப்படும் இந்த தேர்தலில் இந்த முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மகாகத்பந்தன் எனப்படும் மெகா கூட்டணி, மாநிலக்கட்சிகள் ஆகியவற்றுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என பாஜகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என காங்கிரஸும், இவை இரண்டும் இல்லாத 3-வது அணி என அரசியல் கட்சிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில்ல், பீகார், மத்தியபிரதேசத்தில் உள்ள 8 தொகுதிகளிலும், ஜார்கண்ட்டில் உள்ள 3 தொகுதிகளிலும், பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளிலும், சண்டிகரில் உள்ள 1 தொகுதிகளுலும் வாக்கு பதிவு நடைபெறுகிறது. அதேபோல் உத்தரபிரதேசத்தில் 13, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இதையடுத்து இதில் 50 மக்களவைத் தொகுதிகளில் நாளையுடனும், மேற்குவங்கத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்வடைகிறது.

News Counter: 
100
Loading...

Ramya