சனிபகவானின் பார்வையிலிருந்து தப்பிக்க உடனே இதை செய்யுங்கள்....!!

share on:
Classic

ஜோதிட கிரகங்களில் மிக மிக்கியமானதாக சனி கிரகம் திகழ்கிறது. பாவ புண்ணியங்களை வைத்தே சனி பகவானின் அனுகூல பார்வையும், உக்கிர பார்வையும் நம் மீது படுகிறது.

எனவே உங்கள் ஜாதகத்தின் படி சனியின் ஆதிக்கம் இருந்தால் அவரின் பார்வையில் இருந்து தப்பிக்க அவரை வழிபட்டு அவரின் ஆசீர்வாதத்தை பெற்றாலே போதும்.

பூஜை முறை:
கணேசனின் திருவுருவ படம் மற்றும் சனி பகவானின் இரும்பு உருவம் கொண்ட படத்தை வைத்து பூஜை செய்யலாம். வீட்டில் விளக்கை ஏற்றி முதலில் முதற்கடவுள் கணேசனை வணங்கி வழிபாட்டை தொடங்கிய பின் கருப்பு எள்ளை சனி பகவானுக்கு படைக்க வேண்டும். பின் மலர்களை சமர்பித்து சிவன் மற்றும் ஹனுமானை வழிபட வேண்டும். பூஜையின் முடிவில் சனி காயத்திரி மந்திரத்தை 21முறை பாராயணம் செய்ய வேண்டும். பிரசாதம் படைத்து ஆரத்தி காட்ட வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் இதே பூஜையை செய்ய வேண்டும். விரதத்தை மாலையில் முடிக்கும் போது அரிசி சாதத்துடன் உளுந்து அல்லது எள் சாதம் சமைத்து சாப்பிட வேண்டும்.

பூஜையின் நன்மைகள்:

  • சனி பகவான் ஒரு உக்கிரமான கடவுளே கிடையாது.அவர் நாம் செய்யும் நன்மை தீமைகளை பொறுத்தே அவர் நமக்கு நன்மைகளையும், தீமைகளையும் வழங்குகிறார்
  • நாம் செய்யும் சில நற்செயல்கள் மூலம் அவரின் அணுகூலத்தையும் பெற இயலும்.
  • மேலும் சனி பூஜை அன்று ஒரு பிராமணருக்கு இரும்பை தானமாக வழங்கினால் மிகவும் நல்லது.
  • பூஜையின் இறுதி நாளில் அனுமான்,சிவன் மற்றும் சனி பகவான் கோயிலுக்கு சென்று வணங்கி வழிபட்டு வந்தால் சனி பகவானின் அருள் எப்பொழுதும் நமக்கு கிடைக்கும். 
News Counter: 
100
Loading...

aravind