நடுக்கடலில் தோன்றி மறையும் அதிசய சிவன் கோயில்...!!

share on:
Classic

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள அதிசய சிவன் கோயில் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.

குஜராத் மாநிலம் கோலியாத் என்னுமிடத்தில் அமைந்துள்ளது இந்த அதிசய சிவன் கோயில். நிஸ்களங்கேஸ்வரர் என்று அழைக்கப்படும் இந்த சிவன் கோயில் கடலுக்குள் அமைந்துள்ளது. அதாவது கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் கட்டப்படுள்ளது. பொதுவாக இக்கோயில் 6மணி நேரம் மட்டுமே கண்களுக்கு தெரியும் என்பதால் இது அதிசய கோயிலாகவே பார்க்கப்படுகிறது.
இக்கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டுள்ளது என்றும் மகாபாரதப் போரில் பாண்டவர்கள் தங்கள் சகோதரர்களான கௌரவர்களையே கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை போக்க இக்கோயில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடலுக்குள் ஐந்து சிவலிங்கங்களை அமைத்து அதை சுற்றியும் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை வழிபட்டால் சங்கடங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

News Counter: 
100
Loading...

vinoth