2-ஆம் உலகப்போரில் பிரிந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த காதல் ஜோடி..!!

share on:
Classic

இரண்டாம் உலகப்போரின் போது பிரிந்த காதலியை 75 ஆண்டுகளுக்கு பிறகு ராபின்ஸ் என்ற இராணுவ வீரர் மீண்டும் சந்தித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ராபின்ஸ் என்கிற இராணுவ வீரர் சமீபத்தில் நடந்த 75-வது D- நாள் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பத்திரிக்கையாளர்கள் இரண்டாம் உலகப்போர் குறித்து அவரிடம் கேட்டனர்.  அவர்களிடம் பேசிய முன்னாள் இராணூவ வீரர், 1944 ஆண்டு வருகை தந்திருந்தேன். அந்த சமயத்தில் என்னுடைய ஆடைகளை சலவை செய்வதற்காக ஒரு நபரை தேடிக்கொண்டிருந்தேன்.

எனக்கு உதவி செய்வதாக ஒரு பெண் ஒப்புக்கொண்டார். அந்த இடைபட்ட காலத்தில் அவருடைய மகளை நான் காதலித்து வந்தேன். போர் முடிந்து அமெரிக்க திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் அவளை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு அவளை சந்திக்க முடியாமல் போய்விட்டது.

அவளுடைய புகைபடத்தை நான் இன்னும் வைத்திருக்கிறேன் அந்த பெண்ணின் குடும்பத்தை கண்டுபிடிக்க உதவுமாறு பத்திரிக்கையாளர்களிடம் கோரிக்கை வைத்தார். முதன் முதலாக அவர்கள் சந்தித்த இடத்திலிருந்து 27 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் அவர் வசித்து வருவதாக பத்திரிக்கையாளர்கள் முன்னாள் இராணுவ வீரரான ராபின்சிற்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அங்கு சந்தித்த இருவரும் சந்தோசத்தில் உறைந்து போயினர். அப்போது ராபின்ஸ் நீ ஒருபோதும் என் இதயத்தை விட்டு வெளியேறவில்லை எனக் கூறி காதலியின் நினைவாக அவர் வைத்திருந்த பழைய புகைபடத்தை எடுத்து காட்டி இது உனக்காக எனக் கூறி மகிச்சியை பரிமாறிக் கொண்டனர். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan