தற்கொலைக்கு முயன்ற காதலர்கள்..கல்யாண மண்டபமான மருத்துவமனை..!

share on:
Classic

காதல் கல்யாணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க மறுத்ததால், தற்கொலைக்கு முயன்ற காதலர்களுக்கு மருத்துவமனையிலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்ட ருசீகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா, விகராபாத்தை சேர்ந்த ரேஸ்மா மற்றும் நவாஸ் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் தெரியவர, இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செய்வதறியாது நின்ற காதல் ஜோடி, பிரிந்து வாழ மனமின்றி தற்கொலை தான் ஒரே வழி என தவறாக முடிவெடுத்தது. 

முடிவு செய்தது போலவே இருவரும் சேர்ந்து விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.  உயிருக்கு போராடிய நிலையில் காதல் ஜோடியை மீட்டு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்த அனுமதித்தனர். இவர்களின் உண்மையான காதலை உணர்ந்த பெற்றோர்கள், இருவரையும் பிரித்துவைக்க மனமின்றி காதலுக்கு பச்சை கொடி காட்டினர். இதனையடுத்து, இருவருக்கும் மருத்துவமனையிலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.  மணமக்களை மருத்துவமனையில் இருந்தவர்கள் அனைவரும் வாழ்த்தினர்.

 

News Counter: 
100
Loading...

aravind