பேய் சொன்னதாக சொல்லி காதலன் செய்த வெறிச்செயல்..!!

share on:
Classic

பெரு நாட்டில் அபூர்வ சக்தி பெறுவதற்காக பேய் கூறியதாக கூறி காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நாட்டில் இளைஞர் ஒருவர் இயற்கைக்கு மாறான ஒரு சக்தியை வந்து பார் எனவும், அந்த  மெசேஜை செல்போனில் இருந்து அளித்துவிடுமாறும் அவருடைய 16 வயது காதலிக்கு மெசேஜ் செய்துள்ளார். ஆனால் அதை அழிக்க மறுத்த சிறுமி மாலை 5.30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த சிறுமியின் அம்மா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் அந்த சிறுமிக்கு கடைசியாக காதலன் அழைப்பு விடுத்தது செல்போனை ஆய்வு செய்த போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவனை கைது செய்து விசாரித்தனர். அதில் மனித உயிரை தனக்கு காணிக்கையாக செலுத்தினால் இயற்கைக்கு மாறான அபூர்வ சக்தி கிடைக்கும் என சாத்தான் கூறியதால் கொலை செய்தேன் என கூறியுள்ளான்.  இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan