மேடம் துஸாட்ஸ் மெழுகு அருங்காட்சியகம்

share on:
Classic

உலக அளவில் பிரபலமான மேடம் துஸாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்திற்கென ரசிகர் பட்டாளமே உள்ளது. அவ்வப்போது பிரபலங்களின் மெழுகு சிலையை வடிவமைத்து அவர்களை வரவழைத்து சப்ரைஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம் குறித்த சிறப்புத் தொகுப்பை குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. 

மேடம் துஸாட்ஸ் மெழுகு அருங்காட்சியகம் முதன்முதலில் 1835-ம் ஆண்டு லண்டனில் திறக்கப்பட்டது. இந்த மெழுகு அருங்காட்சியகம் பிரான்சை பிறப்பிடமாக கொண்ட மேரி துசாட் என்பவரால் நிறுவப்பட்டது. இவர் 16 வயதில் முதல் மெழுகு சிலையை வடிவமைத்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது 23 மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகம் நிருவப்பட்டு வருகின்றது. மேடம் துசாட்ஸ் லண்டன், லாஸ் வேகாஸ், நியூயார்க், ஆர்லாண்டோ, சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஹாங்காங் போன்ற இடங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா மையமாக விளங்குகிறது. 

இந்தியாவில் முதல் மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகம் 2017-ம் ஆண்டு டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ரீகல் கட்டிடத்தில் திறக்கப்பட்டது. இந்த மெழுகு அருங்காட்சியகத்தில் 50-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் மெழுகு சிலைகள் பார்வையாளர்கள் வெகுவாக கவர்ந்து வருகின்றது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், ஏ.பி.ஜே. அப்துல் கலாம்,தேச தந்தை மகாத்மா காந்தி, பல பிரபல ஹாலிவுட் பிரபலங்களின் மெழுகு சிலைகள் இங்கு உள்ளன. 

ஏழு நாட்களுக்கும் இந்த மெழுகு அருங்காட்சியகம் திறக்கப்பட்டு இருக்கிறது. டெல்லியில் இயங்கி வரும் இந்த மெழுகு அருங்காட்சியகத்தை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.960-ம், குழந்தைகளுக்கு ரூ.760-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

News Counter: 
100
Loading...

udhaya