ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற சொல்லி, முஸ்லீம் மாணவர்களை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய கும்பல்..

share on:
Classic

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மதராஸா பள்ளி மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் முழங்க சொல்லி கிரிக்கெட் பேட்டால் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில் நேற்று மதராஸா பள்ளியின் (இஸ்லாமிய கல்வி கற்றுக்கொடுக்கப்படும் இடம்) ஜிஐசி விளையாட்டு மைதானத்தில் அப்பள்ளி மாணவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வலதுசாரி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அந்த சிறுவர்களிடம் தவறான முறையில் நடந்துகொண்டனர். பின்னர் அவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை கூற சொல்லி கிரிக்கெட் பேட்டால் தாக்கினர். அவர்களிடமிருந்து தப்பித்து மதராஸா மாணவர்கள் ஓட முயன்ற போது, அவர்கள் மீது கற்களை வீசியும் தாக்கியுள்ளனர். இதில் அவர்களில் உடைகள் கிழந்தன, மேலும் அவர்களில் ஒருவரின் சைக்கிளும் அடித்து நொறுக்கப்பட்டது. இதல் காயமடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதராஸா பள்ளி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரை மட்டும் கைது செய்துள்ளனர். 

News Counter: 
100
Loading...

Ramya