இயக்குனர் மணிரத்னத்துடன் நடிகை மடோனா சந்திப்பு : பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்பந்தம்.?

share on:
Classic

இயக்குனர் மணிரத்னத்தை நடிகை மடோனா செபாஸ்டியன் சந்தித்து பேசியுள்ளார். 

பிரபல இயக்குனர் மணிரத்னம், கடந்த பல ஆண்டுகளாகவே பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சி பல காரணங்களால் தடைபட்டது. எனினும் தற்போது அவர் அப்படத்தை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் இணைந்துள்ளனர். மேலும் அனுஷ்கா ஷெட்டி, அமலா பால் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கக் கூடும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஐஸ்வர்யா ராய், தனது குருவுடன் மீண்டும் இணைந்து வேலை செய்வதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார். 

இதனிடையே கடந்த வாரம் மணிரத்னம் தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தி ஊடகங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, அவரது மனைவி சுஹாசினி, மணிரத்னம் நன்றாக உள்ளதாகவும், அடுத்த படத்தின் கதையில் அவர் தீவிரவாக ஈடுபட்டு வருதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கவண், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களில் நடித்த மடோனா செபாஸ்டின் மணிரத்னத்தை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவரும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்திருக்கக் கூடும் என்று வதந்திகள் வேகமாக பரவி வருகின்றன. இதுகுறித்து மணிரத்னமோ அல்லது மடோனாவோ அதிகாரப் பூர்வ தகவலை வெளியிடவில்லை.

News Counter: 
100
Loading...

Ramya