பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..?

share on:
Classic

பிக்பாஸ் நிகழ்ச்சி 55-வது நாளை எட்டியுள்ளது. இந்த வார வெளியேறுபவர்கள் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோரது பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் புரோமோ மிகவும் தாமதமாக மாலை 4 மணிக்கே வெளியிடப்பட்டது. 

நேற்று ஒளிபரப்பான எபிசோடில் ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிந்து இரு அணிகளுக்கு இடையே சண்டை நடைபெற்றது. இதில் ஆண்கள் அணியில் லாஸ்லியாவும், பெண்கள் அணியில் சேரனும் சேர்ந்துகொண்டனர். பின்னர் நடந்த அடுத்த தலைவருக்கான டாஸ்கில் மதுமிதா அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானது, இதை உறுதிபடுத்தும் விதமாக இன்று வெளியிடப்பட்ட முதல் புரோமோவில் மதுமிதா தனது கையில் கட்டு போட்ட படி மேடைக்கு வந்தார், அப்போது மதுமிதாவிடம் பேசிய கமல் 'தட்டில் வைத்துக்கொடுத்த வெற்றியை தட்டிவிட்டு விட்டு இங்கே வந்து நிற்பது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. மேலும் 'இந்த தியாகம் அகிம்சை கலந்ததாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்' என்றும் கூறினார். இதனையடுத்து சேரன் பேசுகையில் 'இது ஒரு தவறான முடிவு, தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும்' என்று தெரிவித்தார்.

இது ஒருவேலை மதுமிதா தற்கொலைக்கு முயன்றது உண்மைதானா என்ற சந்தேகத்தை ரசிகர்களுக்குள் எழுப்புகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது, இந்நிலையில் சற்று முன் வெளியிடப்பட்ட இரண்டாவது புரோமோவில் கமல் வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் மதுமிதா இடம் பெறாதது அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ஒரளவு உறுதி செய்யப்பட்டுவிட்டது.

 

 

இரண்டு நாட்களுக்கு முன் முகின் வனிதாவை தாக்கியதாக தகவல்கள் வெளிவந்தன. அது போன்ற காட்சிகள் ஏதும் அடுத்து ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை.  

News Counter: 
100
Loading...

Saravanan