விஸ்வாசம், பேட்ட திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட தடை

Classic

நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் நடிகர் அஜித்குமாரின் விஸ்வாசம் திரைப்படங்களை, சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இவ்விரு படங்களும் நாளை வெளியாகின்றன. இந்தப் படங்களை இணையதளங்களில் வெளியிட தடைவிதிக்கக்கோரி தயாரிப்பார்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், பேட்ட, விஸ்வாசம் படங்களை சட்டவிரோதமாக வெளியிடக்கூடாது என ரிலையன்ஸ், ஏர்டெல் உள்ளிட்ட 37 இணையதள சேவை நிறுவனங்களுக்கும், 3,710 சட்டவிரோத இணையதளங்களுக்கும் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth