தேர்தல் பறக்கும் படை நகைகளை பறிமுதல் செய்ய தடை கோரிய வழக்கு தள்ளுபடி

share on:
Classic

உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படும் தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்ய தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்லப்படும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை மற்றும் கோவை நகை வியாபாரிகள் சங்கங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் 217 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், பறிமுதல் செய்யப்படும் பொருட்கள், சரிபார்ப்புக்கு பின் உரியவர்களிடம் அன்றைய தினமே வழங்கப்படுகிறது எனவும், சாலையில் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டியுள்ளது எனவும் கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

News Counter: 
100
Loading...

aravind