தமிழக மீனவர்கள் மறுவாழ்வு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஆணை

share on:
Classic

இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மறுவாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா - இலங்கை இடையில் பாக். ஜலசந்தியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை 111 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 439 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்  என்றும், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்க நிதி ஒதுக்ககோரி, உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு வரும் ஜனவரி-10ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளன.

News Counter: 
100
Loading...

sasikanth