கோவை, திருப்பூர் நகரங்களில் விஸ்வாசம் வசூல் தொகையை விநியோகஸ்தர்க்கு வழங்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

share on:
Classic

விஸ்வாசம் திரைப்படத்தின் கோவை நகரம் திருப்பூர் நகரங்களில் வெளியாகி உள்ள 25 திரையரங்குகளின் வசூல் தொகையை விநியோகஸ்தர்க்கு வழங்கக் கூடாது எனவும் தொகைகளை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் திரையரங்குகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜிகே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில் கோவை நகர் மற்றும் திருப்பூர் நகர் ஆகிய பகுதிகளில் விஸ்வாசம் திரைப்படத்தின் விநியோக உரிமையை எங்களின் நிறுவனத்திற்கு தருவதாக வால்மார்ட் நிறுவனம் சார்பில் சாய் பாபா என்பவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்காக 1,25,00,000 ரூபாய் தொகையை தங்கள் நிறுவனத்தின் சார்பில் சாய்பாபாவுக்கு வழங்கப்பட்டதாகவும் ஒப்பந்தப்படி இந்த தொகையை கடந்த ஜனவரி 4ம் தேதிக்கு முன்னர் தங்கள் நிறுவனம் அளித்ததாகவும் ஆனால் ஒப்பந்தபடி விஸ்வாசம் படத்தின் கோவை நகர், திருப்பூர் நகர் ஆகிய பகுதிகளின் விநியோகஸ்த உரிமையை அளிக்கவில்லை. எனவே இந்த இரண்டு ஏரியாக்களிலும் படம் வெளியிட்டுள்ள 25 திரையரங்குகளில் பெறப்படும் வசூல் தொகையை வழங்க தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை நகரம், திருப்பூர் நகரம் ஆகிய பகுதிகளில் விஸ்வாசம் திரைப்படம் வெளியிட்டுள்ள 25 திரையரங்குகளில் வசூல் தொகைகளை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் தற்போது படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்க்கு அளிக்கக் கூடாது எனக்கூறி வழக்கின் விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

News Counter: 
100
Loading...

sasikanth